பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி வரையறுக்கப்பட்ட ஊதியம், சரண்டர் கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு ஊழியர் சங்கம் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 18, 2022

பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி வரையறுக்கப்பட்ட ஊதியம், சரண்டர் கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு ஊழியர் சங்கம் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு

அரசு ஊழியர் சங்கம் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு.

போராட்ட அறைகூவல்

பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி வரையறுக்கப்பட்ட ஊதியம், சரண்டர் போன்ற வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்க அத்துக்கூலி கொத்தடிமை முறையை ஒழித்துக்கட்ட... கோட்டை முற்றுகை

மாநிலம் தழுவிய அனைத்து அலுவலகங்கள் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நமது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி 27.12.2022 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலகங்கள் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்திடுவது.

* ஊழியர் சந்திப்பும், உறுப்பினர் சேர்க்கை இயக்கமும்

இப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நமது கோரிக்கைகளை ஊழியர்கள் மத்தியில் கொண்டு சென்றிடவும், நமது ஸ்தாபன கடமையான உறுப்பினர் சந்திப்பு இயக்கத்தை எழுச்சியோடு துவக்கிடவும் அனைத்து வட்ட, மாவட்ட மையங்களில் வட்ட மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் 09.01.2023 முதல் 27.01.2023 வரை ஊழியர் சந்திப்பு மற்றும் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை எழுச்சிகரமாக நடத்திடுவது.

7 மாவட்ட அளவிலான கோரிக்கைப் பேரணி

நமது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி 10.02.2023 அன்று மாவட்ட அளவிலான பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றிடும் வகையிலான கோரிக்கைப்பேரணியை நடத்திடுவது.

* ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

நமது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி, பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப்பெற்றிட ஒன்றுபட்ட நமது கோரிக்கையின் வலிமையை தமிழக அரசுக்கு வலியுறுத்தும் வகையில் 28.03.2023 அன்று இலட்சக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்கும் வகையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை நடத்திடுவது.

* கோட்டை முற்றுகை

நமது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு தவறும் பட்சத்தில் தமிழக அரசிடம் நியாயம் கேட்டு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது கோட்டையை முற்றுகையிடுவது. மேற்கண்ட வாழ்வாதார கோரிக்கைகளை மீட்டெடுக்கும் போராட்ட நடவடிக்கைகளை தமிழகத்தில் உள்ள அனைத்து துறைவாரி / பிரிவுவாரி ஊழியர்களும் திரளாக பங்கேற்று உரிமை மீட்பு போராட்டத்தை நடத்தி நமது இழந்த உரிமைகளை மீட்டிடவும், இருப்பதை காத்திடவும் அணிதிரள இம்மாநில பிரதிநிதித்துவப்பேரவை அனைவரையும் அறைகூவி அழைக்கின்றது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.