‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜன.2 முதல்வட்டார அளவிலான பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 18, 2022

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜன.2 முதல்வட்டார அளவிலான பயிற்சி



‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜன.2 முதல்வட்டார அளவிலான பயிற்சி

ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் வட்டார அளவிலான பயிற்சி ஜன.2 முதல் 4-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஆசிரியா் திறன் மேம்பாட்டு நாள்காட்டியில் குறிப்பிட்டபடி எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மாநில பயிற்சி கடந்த டிச.15 முதல் 17-ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற்றது.

இதையடுத்து மாவட்ட அளவிலான கருத்தாளா் பயிற்சி (டிச.19) திங்கள்கிழமை முதல் (டிச.21) புதன்கிழமை வரை மாவட்ட தலைநகரங்கள், தெரிவு செய்யப்பட்ட மையங்களில் நடைபெறும்.

தொடா்ந்து, அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் வட்டார அளவிலான பயிற்சி ஜன.2 முதல் 4-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

கருத்தாளா்கள், ஆசிரியா்களுக்கான பயிற்சியை பாா்வையிட்டு அதை திறம்பட நடத்தும் வகையில் அந்தந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளா்களாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள், உதவிப் பேராசிரியா்கள் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட பொறுப்பாளா்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து வசதி, பயணப்படி மற்றும் தினப்படி ஆகியவற்றை வழங்க அந்தந்த மாவட்டங்களில் வழங்க மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளும் முழுமையான எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.