Central Teacher Eligibility Test(CTET-2022) - விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 23, 2022

Central Teacher Eligibility Test(CTET-2022) - விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சிபிஎஸ்இ பாடத்திட்டதின்கீழ் செயல்படும் மத்திய அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையில் ஆசிரியராக பணிபுரிவதற்கு சிபிஎஸ்இ ஆல் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசால் நாடு முழுவதும் முக்கிய நகங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் இருக்கும். மொழித்தாளில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகியவற்றில் ஏதாவது இரண்டை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆண்டிற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

தேர்வு: Central Teacher Eligibility Test(CTET-2022)

CTET-PAPER-I ​தகுதி: 1 முதல் 5 ஆண் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய விரும்புவர்கள் பிளஸ் 2 தேர்ச்சியுடன் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். 

CTET-PAPER-II​ தகுதி: 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ஏதாவது ஒரு தாள் தேர்வு மட்டும் எழுத விரும்பவர்கள் ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். இரண்டு தாள் தேர்வையும் எழுதுபவர்கள் ரூ.1,200 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

எழுத்துத் தேர்வு உத்தேசமாக டிசம்பர் 2022 அல்லது ஜனவரி 2023-க்கும் இடைப்பட்ட நாள்களில் நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை: www.ctet.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.11.2022

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.