அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்த அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘வானவில் மன்றம்’ திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று தொடங்கிவைக்கிறார் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 27, 2022

அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்த அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘வானவில் மன்றம்’ திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று தொடங்கிவைக்கிறார்

அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்த அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘வானவில் மன்றம்’ திட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று தொடங்கிவைக்கிறார்

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அறிவி யல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்த 'வானவில் மன்றம்' திட் டத்தை முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் திருச் சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.

வானவில் மன்றம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற் றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று (திங்கட்சி ழமை) காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு. காலை 9.50 மணிக்கு அவர் திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம்புறப்பட்டு,காலை 10.30 மணிக்கு திருச்சிகளட்டூர் ஆதி திராவிடர் பெண்கள் உயர்தி லைப்பள்ளிக்கு செல்கிறார். அங்கு,அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தைஏற்படுத்தும்வகை யில் ரூ.25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட் டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாவின் தொடங்கி வைக்கிறார். பின்னர். நடமா டும் அறிவியல் ஆய்வக வாக னத்தையும்,மோட்டார்சைக் கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்க ளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடிய சைத்து வழி அனுப்பி வைக் கிறார்.

பெம்பலூர்,அரியலூர் பயணம்

நிகழ்ச்சி முடிந்ததும், திருச் சியில் இருந்து பெரம்பலூ ருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு செல்கிறார். மதியம் 12 மணிக்குபெரம்பலூர் மாவட் டம் வேப்பந்தட்டைதாலுகா |எறையூருக்கு செல்லும்முதல்- அமைச்சர், அங்கு சிப்காட் | தொழில் பூங்காவுக்கு அடிக் சுல் நாட்டுகிறார்.

பின்னர், பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு |சென்று, மதிய உணவு சாப் பிட்டு ஓய்வு எடுக்கும் அவர். மாலை 4 மணிக்கு அங்கிருந்து | புறப்பட்டு அரியலூர் மாவட் டம் கங்கை கொண்ட சோழ புரத்தில் உள்ள மாளிகை மேட்டுக்கு மாலை 5.15 மணிக்கு சென்றடைகிறார். அங்கு நடைபெற்ற அகழ்வா ராய்ச்சி பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்யும் முதல்- அமைச்சர், அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு புறப் பட்டு, அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு, இரவு 7மணிக்கு வந்தடைகிறார். இரவு உணவை முடித்துவிட்டு அங் கேயே தங்கி ஓய்வு எடுக்கி றார்.

நலத்திட்ட உதவி

நாளை (செவ்வாய்க்கி ழமை) காலை 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்படும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 9.30 மணிக்கு அரிய லூர் அருகே கொல்லாபுரத் தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். அத்து டன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடி வுற்ற பணிகளை தொடங்கி யும் வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சிக்கு காரில் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் மதியம் 12.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார். முதல்-அமைச்ச ரின் வருகையையொட்டி திருச்சி, பெரம்பலூர், அரிய லூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. மேலும் முதல்-அமைச்சரை வரவேற்க வழியெங்கும் கட்சிக்கொடிக ளுக்கு தி.மு.க.வினர் ஏற்பாடு கள் செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.