இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இவ்வளவு பிரச்சனையா? கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் பரபரப்பு அறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 15, 2022

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இவ்வளவு பிரச்சனையா? கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் பரபரப்பு அறிக்கை



இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இவ்வளவு பிரச்சனையா? கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் பரபரப்பு அறிக்கை

முறை சாரா கல்வித் திட்டங்களை முழுவதுமாக கைவிட வேண்டும் என அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு குழு வெளியிட்ட அறிக்கை யில், "அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கை யிலே லட்சக்கணக்கான மாணவர்கள் அங்கு பயின்று வருகின்றனர். ஆனால் தூதிஷ்டவசமாக தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத பல்வேறு பணிகளில் ஆண்டு முழுவதும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையால் பல்வேறு பள்ளிகள் தத்தளித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை செய்ய முடியாத அளவிற்கு, வேறுபணி களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஏற்கன வே இருந்து வரும் கற்றல் இடை வெளி கூடுதலாகி பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

உதாரணமாக, வருவாய்த்துறை க்குக் கீழே வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) பணி, வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக் காளரையும் சந்தித்து அவர்களது ஆதார் எண் விவரங்கள் சேகரித்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்தல் பணி, ஆண்டு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டை பெறுவோரு க்கான புதிய சேர்க்கை, நீக்கல், இடம் மாறியவர்களுக்கு மாற்றிக் கொடுத்தல் போன்ற பல பணிகளை, கற்பித்தல் பணிகளை மட்டுமே செய்ய வேண்டிய ஆசிரியர் களுக்குத் தருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.