பழைய ஓய்வூதிய திட்டம்; அரசின் தாமதம் நியாயமல்ல! - தலையங்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 4, 2022

பழைய ஓய்வூதிய திட்டம்; அரசின் தாமதம் நியாயமல்ல! - தலையங்கம்

பழைய ஓய்வூதிய திட்டம்; அரசின் தாமதம் நியாயமல்ல!

பழைய ஓய்வூதியத் திட்டம் தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந் தது. அத்திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதியத்திட்டம், ஊழி யர்களிடம் ஓய்வூதியத்திற்காக பங்களிப்பைக் கோருகி றது. தவிர ஓய்வூதியமும் சொர்ப்பமாக உள்ளது. இந்தப் புதிய ஓய்வூதிய திட்டம் 2003 டிசம்பரில் அறிவிக்கப் பட்டு, 2004 ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஆண்டு தோறும் மத்திய, மாநில அரசுகளால் அரசு ஊழி யர் ஓய்வூதியத்திற்கு ரூ.65 ஆயிரம் கோடி செலவிடப்ப டுவதாகவும். இத்தொகை ஆண்டுதோறும் 20 சதவீதம் உயரும் என்றும் 2003-ல் கூறப்பட்டது. இதனை குறைப் பதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களுக்கு அத்தொகையை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முதலில் இத்திட்டத்தை மத்திய அரசு தனது புதிய ஊழி பயர்களிடம் அறிமுகப்படுத்தியது. பிறகு மாநில அரசுக ளும் தொடர்ந்தன. மேற்கு வங்க மாநிலம் மட்டும் இதை ஏற்காமல் பழைய ஓய்வூதியதிட்டத்தையே தொடர்ந்தது. இத்திட்டத்திற்கு அரசு ஊழியர்களிடையே இயல்பாகவே எதிர்ப்பு இருந்தது. புதிய ஓய்வூதிய திட்டம் உடனடியாக ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. குறிப்பாக 2004 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் ஓய்வு பெறும்போதுதான் இதன் பாதிப்பு முழுமையாக புலப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் தற்போது போராடி வருகின்றனர். ஏற்க னவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநி லங்கள் பழைய ஓய்வூதியத்திட்டத்திற்கு மாறி விட்டன. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களும் இதே முடிவை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன. ஆந்திரப்பிர தேசம், தமிழகம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களிலும் அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்தியாவில் 3465 லட்சம் மக்கிய அரசு ஊழியர்களும் கோடி

தேசம். தமிழகம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களிலும் அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்தியாவில் 34.65 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 1.06 கோடி மாநில அரசுகளின் ஊழியர்களும் உள்ளனர். இவர்களில் 2004-க்குப் பிறகு பணியில் சேர்ந்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அவர்களை மட்டுமே புதிய ஓய் வூதிய திட்டம் பாதிக்கும். ஒட்டுமொத்த வேலைவாய்ப் பில் புதிய ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் அரசு தனது சமூகப் பொறுப்புணர்வைத் தட்டிப்பறிக்க முடியாது.

சமமான பணிக்கு சமமான ஊதியம் என்ற நிலையை தொழிலாளர்களிடம் நிலைநாட்ட வேண்டிய பொறுப் புள்ள அரசுக்கு தொழிலாளர்கள் கவுரவமான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதை உறுதிப்படுத் தும் கடமையும் இருக்கிறது. 60 வயதுக்குமேற்பட்டமூத்த குடிமக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2021-ல் இந்த எண்ணிக்கை 13.8 கோடியாக உள்ளது. இது 2026 ல் 17.3 கோடியாக அதிகரிக்கும் என்று ஐ.நா. மக்கள் தொகைநிதியமைப்பு மதிப்பிட்டுள்ளது. முதுமை காரண மாக பிறரை சார்ந்திருப்போரின் எண்ணிக்கை 2031-ல் 20.1 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகி றது. இந்த நிலை முதியோர்களுக்கு அரசு கவனம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆனால் அரசோ, முதியோர் பாதிக்கப்படும் வகையில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறது. முறை சார்ந்த தொழிலாளர்களுக்கே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதபோது, பிற தொழிலாளர்கள் எவ்வாறு அதனை பெற முடியும்.

தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத் திட்டங்க ளிலேயே முரண்பாடும், ஒழுங்கின்மையும் காணப்படு கின்றன. உதாரணமாக 5 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சட்டசபை உறுப்பினர் ஒருவர் முழு ஓய்வூதியம் பெறுகிறார். இதிலும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு உண்டு. மத்தியப்பிரதேசத்தில் ஒருநாள் பணியாற்றிய எம்.எல்.ஏ.வும், அரியானாவில் 7 முறை தேர்வான எம். எல்.ஏ.வும் ரூ.2.38 லட்சம் மாதாந்திர ஓய்வூதியம் பெறு கிறார்கள். அரசு, தனியார் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அவர் கடைசியாகப் பெற்ற ஊதி யத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக அளிப்பதே சரியான தாக இருக்கும். ஆனால் அரசோ, அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் கைவைத்திருக்கிறது. அரசு இதற்கு முன் ஊழியர்களுக்கு அளித்து வந்த ஓய்வூதியப் பயன்களை அதிகரிக்காவிட்டாலும் அவற்றை குறைக்காமலேனும் இருக்கலாம். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவராமல் அரசு தாமதிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.