அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் - அரையாண்டுத் தேர்வு - 6 முதல் 12 ஆம் வகுப்புகள் - கால அட்டவணை அனுப்புதல் - தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 28, 2022

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் - அரையாண்டுத் தேர்வு - 6 முதல் 12 ஆம் வகுப்புகள் - கால அட்டவணை அனுப்புதல் - தொடர்பாக

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் - அரையாண்டுத் தேர்வு - 6 முதல் 12 ஆம் வகுப்புகள் - கால அட்டவணை அனுப்புதல் - தொடர்பாக.

திருவள்ளூர் மாவட்டம் 2022-2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கான அரையாண்டுத் தேர்வு 15.12.2022 முதல் 23.12.2022 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இத்தேர்விற்கான கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

மேலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகள் மற்றும் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றி அரையாண்டுத் தேர்வினை நடத்திட அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுவான அறிவுரைகள்:

அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதம் 15.12.2022 முதல் 23.12.2022 வரை நடைபெறும்.

6,8,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு முற்பகலிலும் மற்றும் 7, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும்.

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக வினாத்தாட்கள் வழங்கப்படும்.

தேர்வு நாட்களுக்குரிய வினாத்தாட்களை பெற தங்கள் பள்ளி சார்பாக ஒரு நபரை தேர்ந்தெடுத்து, அவ்விவரத்தினை சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளித் தலைமையாசிரியருக்கு முன்கூட்டியே தகவலினை தெரிவித்தல் வேண்டும்.

அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையின்படி, தங்கள் பள்ளி சார்பாக அனுமதிக்கப்பட்ட நபர் சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியரை அணுகி அந்தந்த தேர்வு நாட்களுக்குரிய (முற்பகல் தேர்விற்கான வினாத்தாட்கள் காலை 7.30 மணியிலிருந்தும், பிற்பகல் தேர்விற்குரிய வினாத்தாட்கள் நண்பகல் 12 மணியிலிருந்தும்) வினாத்தாட்களை மந்தண முறையில் பெற்று உரிய நேரத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கி தேர்வுகளை எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமல் சிறப்பான முறையில் நடத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு: கால அட்டவணை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.