ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 10 விடுதிகள் கட்ட ரூ.44.58 கோடி வழங்கி தமிழக அரசு அனுமதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 15, 2022

ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 10 விடுதிகள் கட்ட ரூ.44.58 கோடி வழங்கி தமிழக அரசு அனுமதி

ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 10 விடுதிகள் கட்ட ரூ.44.58 கோடி வழங்கி தமிழக அரசு அனுமதி!!!

ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 10 விடுதிகள் கட்ட ரூ.44.58 கோடி வழங்கி தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. தமிழக முதல்வர் எண்ணத்திற்கு உருகொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் 2022-2023ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். “ஆதிதிராவிடர் மாணாக்கர் தமது பள்ளிக் கல்வியை இடைநிற்றல் இன்றி தொடர்ந்திடும் வகையில், மிகவும் பழுதடைந்துள்ள, சேத்தியாதோப்பு, குளித்தலை, மீன்சுருட்டி, திருவண்ணாமலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் இயங்கி வரும் 5 பள்ளி மாணவர் விடுதிகள் மற்றும் நிலக்கோட்டை, செய்யூர், வந்தவாசி,

செஞ்சி மற்றும் திருப்பனந்தாள் ஆகிய இடங்களில் இயங்கி வரும் 5 பள்ளி மாணவியர் விடுதிகள் என மொத்தம் 10 விடுதிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய விடுதிக் கட்டடங்கள் ரூ. 45. 45 கோடி செலவில் கட்டப்படும்’’ மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு பழுதடைந்த 10 ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவ/ மாணவியர் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட ரூ.44.58 கோடிக்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.