10ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு புதிய மையங்கள் அமைப்பது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 18, 2022

10ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு புதிய மையங்கள் அமைப்பது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கு புதிய மையங்கள் அமைப்பது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!

மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது வரையறைக்குட்பட்ட பள்ளிகளிலிருந்து , மார்ச் 2023 இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் ( பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய தேர்வு மையங்கள் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் . அதன்பின் பள்ளிகளிலிருந்து பெறப்படும் கருத்துருவினை ஆய்வுசெய்து பரிசீலனை செய்து , அப்பள்ளிகளை நேரில் பார்வையிட்டு பிற்சேர்க்கை “ அ ” மற்றும் “ ஆ ” ஆகியவற்றைப் பூர்த்தி செய்து பெறப்பட்ட கருத்துருக்களை முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்புதல் வேண்டும்.

மேலும் , மார்ச் 2021 - 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான ஓராண்டுக்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட வேண்டுமெனில் ( சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை / நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின் ) மீண்டும் கருத்துரு அனுப்பி இயக்குநரின் ஆணை பெறவேண்டும் எனத் தெரிவிக்கலாகிறது . அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட புதிய தேர்வு மையங்கள் பற்றிய செய்தியினை மந்தணமாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும் . பரிந்துரையின்றி பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவிற்குப் பின் பெறப்படும் கருத்துருக்கள் ஆகியவை கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

DGE - New Centre Details.pdf - Download here

https://drive.google.com/file/d/1e0e5RTRfd-fayo2r9pTlw0BO4lB3Cv46/view?usp=drivesdk

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.