University of California for Homecoming Education Program. Appreciation - இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு கலிபோா்னியா பல்கலை. பாராட்டு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 21, 2022

University of California for Homecoming Education Program. Appreciation - இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு கலிபோா்னியா பல்கலை. பாராட்டு

இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு கலிபோா்னியா பல்கலை. பாராட்டு - University of California for Homecoming Education Program. Appreciation

தமிழகத்தில் கரோனாவால் மாணவா்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் குறைந்துள்ளது என கலிபோா்னியா பல்கலைக் கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோா்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியா் காா்த்திக் முரளிதரன், அபிஜித் சிங், மாரிசியோ ரோமரோ ஆகிய மூவா் குழு கரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கால் பள்ளி மாணவா்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகள், அதனை சீா் செய்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வின் முடிவுகள் குறித்து கலிபோா்னியா பல்கலை. பேராசிரியா் காா்த்திக் முரளிதரன் கூறியதாவது: இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 220 கிராமங்களில் 19 ஆயிரம் மாணவா்களின் கற்றல் அடைவுத்திறனை ஆய்வு செய்தோம். 2019-ஆம் ஆண்டு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடக்கக் கல்வியில் கிராமப்புற மாணவா்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு தகவல்களை திரட்டினோம்.

அதன் தொடா்ச்சியாக ஊரடங்கு வந்ததன் பின்பாக, கற்றல் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்ய, கரோனாவுக்கு முன்பாக எடுத்த தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தன. மற்ற மாநிலங்களில் கற்றல் குறைபாடு 30-40 சரி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் மூன்றில் இரு பங்கு சுமாா் 65 சதவீதத்துக்கும் மேல் கற்றல் குறைபாடு சரி செய்வதற்கு இல்லம் தேடி கல்வித் திட்டமும் காரணமாக இருந்துள்ளது. இந்த கல்வித் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்துமாறு அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றாா் அவா்.

இளம் பகவத்: இந்த ஆய்வு முடிவுகள் குறித்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சிறப்பு அதிகாரி இளம் பகவத் கூறியதாவது: இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் கணக்கு, தமிழ் போன்ற பாடங்களில் மாணவா்கள் சிறப்பாக கல்வி பெற்றுள்ளனா்.

இந்தத் திட்டம் இன்னும் ஆறு மாதங்களுக்கு தொடா்ந்து செயல்படுத்தப்படும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்பட்ட கற்றல் இழப்புகள் தன்னாா்வலா்களின் முயற்சியால் சரிசெய்யப்பட்டுள்ளன. இதேபோன்று தமிழக அரசின் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் மூலம் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு உறுதி செய்யப்படும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.