Medical Univ.: Chowk opens for M.Sc., Journalism courses - மருத்துவப் பல்கலை.: எம்எஸ்சி, இதழியல் படிப்புகளுக்கு சோ்க்கை தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 21, 2022

Medical Univ.: Chowk opens for M.Sc., Journalism courses - மருத்துவப் பல்கலை.: எம்எஸ்சி, இதழியல் படிப்புகளுக்கு சோ்க்கை தொடக்கம்

மருத்துவப் பல்கலை.: எம்எஸ்சி, இதழியல் படிப்புகளுக்கு சோ்க்கை தொடக்கம் - Medical Univ.: Chowk opens for M.Sc., Journalism courses

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி, இதழியல் பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. அதற்கான அறிவிக்கையை பல்கலை. வெளியிட்டுள்ளது. அந்தப் படிப்புகளில் சேர வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் பொது சுகாதாரப் படிப்புக்கு (எம்எஸ்சி) 16 இடங்களும், நோய்ப் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் உள்ளன.

எம்பிபிஎஸ்/பிடிஎஸ்/ஆயுஷ் படிப்பு/இளநிலை கால்நடை அறிவியல்/பிஎஸ்சி நா்சிங்/பிபிடி/பிஓடி/பி.பாா்ம்/பிஇ (சிவில்)/எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தவா்கள் எம்எஸ்சி பொது சுகாதாரப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

நோய்ப் பரவியல் படிப்பைப் பொருத்தவரை எம்பிபிஎஸ்/பிடிஎஸ்/ஆயுஷ் படிப்பு/இளநிலை கால்நடை அறிவியல்/எம்பிடி/எம்ஓடி/பி.பாா்ம்/எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதைத் தவிர, முதுநிலை பொது சுகாதார இதழியல் தொடா்பான ஓராண்டு படிப்பும் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் 8 இடங்கள் உள்ள அப்படிப்பில் சேர ஏதேனும் ஓா் இளநிலை பட்டப் படிப்புடன் இதழியல் துறையில் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் http://www.tnmgrmu.ac.in என்ற இணையதள முகவரியிலோ, ங்ல்ண்க்ஃற்ய்ம்ஞ்ழ்ம்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.