மாணவர்கள் சேர்க்கை / நீக்கல் பதிவேடு பராமரித்தல் சார்ந்து சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலரின் அறிவுரைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 27, 2022

மாணவர்கள் சேர்க்கை / நீக்கல் பதிவேடு பராமரித்தல் சார்ந்து சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலரின் அறிவுரைகள்!

சிதம்பரம், மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

முன்னிலை: திரு.இரா.சௌந்திர ராஜன். எம்.எஸ்சி., பி.எட்.. எம்.பில்.,

ந.க.எண்: 6072/ஆ5/2022

நாள்:26.08.2022

பொருள்: பள்ளிக்கல்வி - கடலுார் மாவட்டம் - சிதம்பரம் கல்வி மாவட்டம் - அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை | நீக்கல் பதிவேடுகள் பராமரித்தல் சார்ந்து அறிவுரைகள் - வழங்குதல் - சார்பு.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை / நீக்கல் பதிவேட்டினை பரிமரித்தல் சார்ந்து கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பள்ளித் துணை ஆய்வாளரின் பார்வையின் போது மாணவர்கள் சேர்க்கை / நீக்கல் பதிவேட்டினை முன்னிலைப்படுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

1. பதிவேட்டில் பக்க எண் வரிசையாக எழுதப்பட வேண்டும்.

2. பதிவேட்டின் முதல் பக்கத்தில் தலைமையாசிரியர் சான்றளிக்கப்பட வேண்டும்.

3. பதிவேட்டின் இரு புறத்திலும் பள்ளியின் முத்திரை இருக்க வேண்டும்.

4. பதிவேட்டின் இரு பக்கத்திலும் கல்வி ஆண்டு இடம் பெற வேண்டும்.

5. சேர்க்கை பதிவேட்டில் மாணவர்கள் பிறந்த தேதி எண்ணாலும் எழுத்தாலும் இருக்க வேண்டும். நாள் / மாதம் இரு இலக்கங்களிலும் மற்றும் ஆண்டு நான்கு இலக்கங்களிலும் (DD/MM/YYYY) எழுதப்பட வேண்டும்.

6. சேர்க்கை பதிவேட்டில் வெண்மையாக்கி ( whitener) பயன்படுத்தக் கூடாது.

7. ஒவ்வொரு கல்வி ஆண்டும் சேர்க்கை / நீக்கல் பதிவேட்டில் இடம்பெற வேண்டும்.

8. பதிவேட்டில் மாணவர்கள் சேர்ந்த வகுப்பு மற்றும் இனவாரியான சுருக்கத்தில் (Abstract) தலைமையாசிரியரின் கையொப்பம் இடம் பெற வேண்டும்.

9. A, B மற்றும் C சுருக்கம் 6, 7 மற்றும் 8 -ஆம் வகுப்பு மாணவர்களின் சுருக்கத்தில் (Abstract) தலைமையாசிரியரின் கையொப்பம் இடம் பெற வேண்டும்.

10.6,7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் RTE -ன்படி மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் வயதின் அடிப்படையில் வயதிற்கு ஏற்ற வகுப்பிற்கு சேர்க்கை செய்யலாம்.

11.9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கை செய்யும் போது EMIS மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் பள்ளியில் சேர்க்கை செய்தல் கூடாது.

12.புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் தலைமையாசிரியர் கண்டிப்பாக கையொப்பம் இட வேண்டும்.

13.புதிய மாணவர்கள் பள்ளியில் சேர்ந்த பிறகு அவர்களுடைய பழைய மாற்றுச்சான்றிதழினை நீக்கம் (Cancelation) செய்து தலைமையாசிரியர் கையொப்பம் பெற வேண்டும்.

14.சேர்க்கை i நீக்கல் பதிவேட்டில்' சேர்க்கை எண் தொடர்ச்சியாக இடம் பெற வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வரிசை எண் 1 முதல் தொடங்கப்பட வேண்டும்.

15.சேர்க்கை / நீக்கல் பதிவேட்டில் பக்கங்களை கிழிக்கவோ / ஒட்டவோ (Tearing/ Pasting) செய்ய கூடாது. மேலும் பதிவேட்டில் ஏதேனும் தவறு ஏற்படின் அந்த பக்கத்தினை தலைமையாசிரியரால் நீக்கம் செய்து விட்டு கையொப்பம் இடம் பெற வேண்டும்.

16.2022-2023-ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பதிவேட்டில் மாணவர்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற வேண்டும்.

17.மாணவர்கள் புதியதாக சேர்க்கை செய்த பிறகு சேர்க்கை பதிவேட்டில் அனைத்து வகையான விவரங்களை எழுதிய பிறகு, ஆசிரியர்களை குழுவாக அமைத்து அனைத்து வகையான விவரங்களை சரிபார்க்கப்பட வேண்டும்.

18.புதிய மாணவர்கள் சேர்க்கை சார்பான தகவல்கள் அனைத்தும் EMIS Portal - ல் உடன் பதிவேற்றம் செய்யப்படுதல் வேண்டும்.

19.மாணவர்களின் விவரங்களை EMIS-ல் பதிவேற்றம் செய்யும்போது மாணவர்கள், பெற்றோர்கள் / பாதுகாப்பாளர் பெயர்களை தமிழில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், அதன் முன்னெழுத்தினையும் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

20.ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதி மாதத்தில் மாணவர் தேர்ச்சி விவர அறிக்கை அளிப்பதற்கு முன்பாக மாணவர் சேர்க்கை / நீக்கல் பதிவேட்டில் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளித்துணை ஆய்வாளரின் மேலொப்பம் பெற வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.