விடைத்தாளுடன் 500 ரூபாய் தாளை இணைத்த மாணவன்: ஓராண்டுக்குத் தடை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 13, 2022

விடைத்தாளுடன் 500 ரூபாய் தாளை இணைத்த மாணவன்: ஓராண்டுக்குத் தடை

இந்த 500 ரூபாயை வைத்துக் கொண்டு என்னை பாஸ் செய்துவிடுங்கள் என்று எழுதிய மாணவன் ஓராண்டு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர், அறிவியல் பாடத் தேர்வில், விடைத்தாளுடன் 500 ரூபாயை இணைத்து, இந்த பணத்தை எடுத்துக் கொண்டு என்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிடுங்கள் என்று எழுதியிருந்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அவன் அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை செய்யப்பட்டிருப்பதுடன், இந்த தேர்வில் தோல்வி என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



வழக்கமாக இதுபோன்ற செயல்கள் பல்கலைக்கழகத் தேர்வுகளில் நடைபெறுவது வழக்கம் தான் என்றாலும், பள்ளித்தேர்வுகளில் இதுபோன்று நடந்ததில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.



இந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு தேர்வில் மட்டும் அல்ல, இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வுகள் என இரண்டு விடைத்தாள்களிலும் அந்த மாணவர் 500 ரூபாயை இணைத்துள்ளார்.



இது குறித்து மாணவரிடம் விசாரித்தபோது, தான் சரியாக படிக்கவில்லை, விடைத்தாளுடன் பணம் வைத்து அனுப்பினால் தேர்ச்சி செய்து விடுவார்கள் என்று சிலர் பேசிக் கொண்டிருந்ததை உண்மை என்று நம்பி இவ்வாறு செய்துவிட்டேன், இது தேர்வாளருக்கு லஞ்சம் கொடுப்பதுபோன்ற குற்றம் என்று எனக்குத் தெரியாது என்கிறார்.



இந்த விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கூறுகையில், இரண்டு பாடங்களிலும் 27 மற்றும் 29 மதிப்பெண் எடுத்திருந்தார். ஒரு வேளை அவர் 500 ரூபாயை இணைக்காவிட்டால், ஆசிரியர்களே மாணவர்களின் எதிர்காலம் கருதி, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணைப் போட்டு மாணவரை தேர்ச்சி பெற வைத்திருப்பார்கள் என்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.