அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதம் - SBI அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 15, 2022

அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதம் - SBI அறிவிப்பு

அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்துவதாக SBI அறிவித்துள்ளது.

வட்டி உயர்வு இன்று (ஆக.15) முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, 3 மாதங்களுக்கான வட்டி விகிதம் 7.15 சதவீதத்தில் இருந்து 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.

6 மாதங்களுக்கான வட்டி விகிதம் 7.45 சதவீதத்தில் இருந்து 7.65 ஆகவும், ஓராண்டுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதத்தில் இருந்து 7.70 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இரண்டு ஆண்டுக்கான வட்டி விகிதம் 7.7 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாகவும், 3 ஆண்டுக்கான வட்டி விகிதம் 7.8 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம், எஸ்.பி.ஐ, எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி இருந்தது.

வட்டி விகித உயர்வால், வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான இ.எம்.ஐ அதிகரிக்கும்.

ஏப்ரல் 2016 முதல் எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் வங்கிகள் டெபாசிட், செலவுகள் உள்ளிட்டவற்றை பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு வங்கிகள் வட்டி விகிதங்களை நிர்ணயித்து வருகின்றன.

அனைத்து வங்கி கடன்களும் எம்.சி.எல்.ஆர் அல்லது ஈ.பி.எல்.ஆர் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஈ.பி.எல்.ஆர் என்பது நேரடியாக ரெபோ விகிதத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

எஸ்.பி.ஐ, கடந்த வாரம் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது.

இதன்படி, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புகளுக்கு பொதுமக்களுக்கு 2.90 முதல் 5.65 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதம் முதல் 6.45 சதவீதமாக வட்டி விகிதத்தை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.