அகவிலைப்படி உயர்வு குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 15, 2022

அகவிலைப்படி உயர்வு குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

அகவிலைப்படி உயர்வு குறித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாக உள்ளது

தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படியினை 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக எதிர்வரும் 01.07.2022 முதல் உயர்த்தி வழங்குவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்றைய சுதந்திர தின உரையின் போது அறிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 01.07.2021 முதல் 17% உயர்த்தி வழங்கியது.

தமிழக அரேசா, இந்த அகவிலைப்படி உயர்வினை 01.01.2022 முதல் மட்டுமே. ஆறு மாத காலம் கால தாமதமாக உயர்த்தி வழங்கியது.

அதே போன்று, கடந்த 01.01.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட 3% அகவிலைப்படி உயர்வினை மீண்டும் ஆறு மாத காலம் காலதாமதமாகவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மேலும் ஆறு மாதங்களுக்கான நிலுவைத் தொகையை தமிழக அரசு ஊழியர்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பின்னர் தமிழக அரசு ஊழியர்கள். அகவிலைப்படி காலதாமதமாக வழங்கப்படுவதால் மட்டும் 120% இழப்பைச் சந்தித்துள்ளனர்.

அதே போல் ஒப்படைப்பு விடுப்பு பணப்பலன் வழங்கப்படாத காரணத்தால், மேலும் ஒரு மாத

ஊதியத்தை அனைத்து அரசு ஊழியர்களும் இழந்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு காலங்காலமாக வழங்கப்படும் அகவிலைப்படி, ஒப்படைப்பு விடுப்பு பணப்பலன் போன்ற பொருளாதார உரிமைகள்...

தமிழக கிராமப்புற பொருளாதார சுழற்சியை மேம்படுத்தப் பயன்படும் என்பதை மறந்து, தமிழக அரசு தனக்குள்ள நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியான நிதி இழப்பினை ஏற்படுத்தி வருவதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் ஏற்கவில்லை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.