தரவு அறிவியல் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 15, 2022

தரவு அறிவியல் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

Applications are invited from students to join the Bachelor of Data Science degree program launched by IIT Chennai. The world's first Bachelor of Data Science degree program has been launched by IIT Chennai. In this, students who have completed Plus 2 or its equivalent can apply and study four-year degree.

Applications are now being accepted for this year's classes. Apply at www.tahdco.com. 21st is the last day. There is no need to take part in the entrance exam conducted by IIT Chennai to study. Instead, students who have completed their Plus 2 or equivalent studies will be required to pass the qualifying examination at the end of four weeks of training conducted by IIT Chennai and TADCO. Students of all disciplines such as Science, Humanities, Commerce etc. are eligible to study in this program. Apply.

Classes in this program will be conducted through the internet. The exams are conducted in-person at exam centers across the country. Students can pursue the Bachelor of Data Science degree offered by IIT Chennai while pursuing their degree of choice. Eligibility should be Adi Dravidian and Tribal students who have passed Plus 2 or equivalent course. The cost of study will be covered by 'TADCO' as an education loan.

சென்னை ஐ.ஐ.டி.,யால் துவக்கப்பட்ட, இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்பு திட்டத்தில் சேர, மாணவ - மாணவியரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.உலகின் முதல் இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்பு திட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யால் துவக்கப்பட்டது. இதில், பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்கள், அனைவரும் விண்ணப்பித்து, நான்கு ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம்.

இந்த ஆண்டு வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும், 21ம் தேதி கடைசி நாள்.இதில் சேர்ந்து படிக்க, சென்னை ஐ.ஐ.டி., சார்பில் நடத்தப்படும், நுழைவுத் தேர்வில் பங்கு பெறத் தேவை இல்லை. அதற்கு பதிலாக, பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் தாட்கோ சார்பில் அளிக்கப்படும், நான்கு வார பயிற்சி முடிவில் வரும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.இந்த திட்டத்தில் படிக்க, அறிவியல், மனிதவியல், வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் வகுப்புகள், இணையதளம் வழியே நடத்தப்படும். நாடு முழுதும் உள்ள தேர்வு மையங்களில், தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன.மாணவர்கள் தங்கள் விருப்ப பட்டப்படிப்பை படித்துக் கொண்டே, சென்னை ஐ.ஐ.டி., வழங்கும் இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்பை படிக்கலாம். இதற்கான தகுதிகள், பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்ற, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களாக இருக்க வேண்டும். படிப்புக்கான செலவை, 'தாட்கோ' கல்விக் கடனாக வழங்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.