கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்களைத் தாக்கும் சைபர் சிக்னெஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 3, 2022

கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்களைத் தாக்கும் சைபர் சிக்னெஸ்

கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்களைத் தாக்கும் சைபர் சிக்னெஸ்:

*அதென்ன சைபர் சிக்னெஸ்?* 👇👇

கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போனில் நீங்கள் ஸ்க்ரோலிங் செய்யும் போது லேசான தலைவலி, தலைச்சுற்றல், அல்லது குமட்டலை உணர்ந்திருந்தால் உங்களுக்கு சைபர் சிக்னெஸ் உள்ளதாக தெரிந்து கொள்ளலாம். உங்களின் புலன்கள் மூளைக்கு முரண்பட்ட சமிக்ஞைகளை அனுப்பும்போது இது உண்டாகிறது.

உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் ஸ்க்ரோலிங் செய்யும் போது, ​​பல ஸ்கிரீன்களை பயன்படுத்தும் போது அல்லது வேறு யாராவது ஸ்கிரீனைக் கட்டுப்படுத்தும் மெய்நிகர் கூட்டத்தில் கலந்துகொள்ளும் போது என பல சமயங்களில் சைபர் சிக்னெஸை உணரலாம்.

இவை அனைத்துமே நம் பார்வையுடன் தொடர்புடையது. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், எப்படி நகர்கிறீர்கள் என்பதை உணர புலன்கள் தேவை.

ஆனால் புலன்கள் முரண்பட்ட தகவல்களை மூளைக்கு தெரிவிக்கும்போது இந்த அறிகுறிகள் உண்டாகிறது. *அறிகுறிகள்:* 👇

குமட்டல் இதன் ஆரம்ப அறிகுறியாக இருக்கும். நாளடைவில் இது வாந்தியாக அதிகரிக்கும்.

கம்ப்யூட்டர் ஸ்கிரீனை பார்த்தவாறு நீண்ட நேரம் வேலை செய்யும்போது, ​​நீங்கள் லேசாக தலை அல்லது அறை சுழல்வது போன்று உணரலாம்.

தலைச்சுற்றல் உங்களை திசைதிருப்பி, குறிப்பிட்ட நிலையில் கவனம் செலுத்துவதை கடினமாக்கும். எலக்ட்ரானிக் சாதனங்களை உற்றுப் பார்ப்பது கண்களில் அழுத்தத்தை தருகிறது. இது கண் எரிச்சல், வறட்சி, மங்கலான பார்வைக்கு வழிவகுக்கும்.

நீங்கள் ஒரே நிலையில் அதிக நேரம் இருந்தால், உங்களுக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை வலி ஏற்படக்கூடும்.

கண் அழுத்தத்துடன், இது தலைவலிக்கும் வழிவகுக்கிறது. தூக்கம் வருதல், கண்கள் சிவத்தல் மற்றும் வியர்த்தல் ஆகியவையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.