வரும் 1-ம் தேதிக்கு பின் இவர்களுக்கு பென்ஷன் கிடையாது.. விதிகளை மாற்றியது அரசு..! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 20, 2022

வரும் 1-ம் தேதிக்கு பின் இவர்களுக்கு பென்ஷன் கிடையாது.. விதிகளை மாற்றியது அரசு..!

மத்திய அரசின் உத்தரவாதத்துடன் வரும் அடல் பென்ஷன் யோஜனா திட்டம், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில், 18 முதல் 40 வயது வரையிலான இந்திய குடிமகன்கள், வங்கி அல்லது தபால் அலுவலக கிளைகள் மூலம் சேரலாம்.

இதில் சேருவோருக்கு, அவர்களின் பங்களிப்பு தொகையை பொறுத்து 60 வயதுக்கு மேல் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியமாக திரும்ப அளிக்கப்படும்.

இந்நிலையில், அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் தற்போது பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கடந்த 10-ம் தேதி அறிவித்தது.

அதன் படி, வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேருவதற்கு அனுமதி கிடையாது.

ஒரு வேளை, அக்டோபர் 1 அல்லது அதற்குப் பிறகு அடல் பென்ஷன் யோஜனா கணக்கைத் திறந்தால் என்ன பிரச்சனைகளை வருமான வரி செலுத்துவோர் சந்திக்கக் கூடும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

மத்திய நிதி அமைச்சக அறிவிப்பின் படி, அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு வருமான வரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைந்திருந்தால் அவர்கள் கணக்கு முடக்கப்படும். இதோடு, சந்தாரர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் அவர்களிடமே ஒப்படைக்கப்படும்.

ஓய்வூதியம் ஒன்றைக் கருத்தில் வைத்து அரசு அறிவித்துள்ள திட்டத்தில் பலர் இணைவார்கள். ஆனால் தற்போதுள்ள அறிவிப்பின் படி, வருமான வரி செலுத்துவோரும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் கணக்கு வைத்திருக்க விரும்பினால் அவர்கள் அக்டோபர் 1, 2022 க்கு முன்னதாக திட்டத்தில் சேரலாம்.

இதையடுத்து, வருகிற செப்டம்பர் 30, 2022 வரை சந்தாதாரர்களாக இருக்கலாம். இதற்குப் பின்னர் வருமான வரி செலுத்தும் நபர்களின் அடல் பென்ஷன் யோஜனா கணக்கு செல்லாததாகிவிடும் என அறிவித்துள்ளது.

இதோடு, வருமான வரி செலுத்துவோர் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) போன்ற திட்டத்தில் சேரலாம். அதன்படி, ஓய்வுக்குப் பிறகு அதிக ஓய்வூதியத் தொகைகளைப் பெறலாம்.

இதோடு வரி செலுத்துவோர் அதிக உத்தரவாதம் மற்றும் வரி இல்லாத வருமானத்திற்காக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்ற திட்டங்களில் சேர்ந்து பயன் பெற முடியும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.