உயர் கல்வி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் - அமைச்சர் பொன்முடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 21, 2022

உயர் கல்வி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் - அமைச்சர் பொன்முடி

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகர மன்ற தலைவர் முருகன் இல்ல, தேவி முருகன் மஹால் திருமண மண்டப திறப்பு விழா நடந்தது.நகர மன்ற தலைவர் முருகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் தேவிமுருகன் வரவேற்றனர். அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, திருமண மண்டபத்தை திறந்து வைத்து, ஏழு ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது.

திருமணம் கட்சிப் பாகுபாடு இன்றி நடந்துள்ளது. அனைத்து தரப்பு மணமக்களும் பங்கேற்று நடத்தப்படும் இந்த திருமணத்தில் கட்டில், பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்படுகிறது. மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்.முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் செய்திருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அந்த அடிப்படையில் பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர் கல்விக்கு சென்றால் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது இந்தியாவிலே தமிழக முதல்வர் மட்டுமே.

திருக்கோவிலுாருக்கு அரசு கல்லுாரியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் பிள்ளைகளை அரசு கல்லுாரில் சேர்த்து பயன்பெறுங்கள் இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் சச்சு, கோத்தம்சந்த், கண்ணப்பன், தியாகராஜன், அண்ணாதுரை, செல்லபாண்டியன், வைத்தீஸ்வரன், கிருஷ்ணன், அர்ச்சணாசுப்ரமணியன், நாமதுரை, இராமலிங்கம், டாக்டர் கமல்சேகரன், ஆறுமுகம் டிரேடர்ஸ் செந்தில், வழக்கறிஞர் ராதா, ஐ.ஜே.கே., மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார். சீனிவாசன், வெங்கடேசன், பாலாஜி, தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், ஸ்டாலின், பொறியாளர்கள் பாலாஜி, கருணாநிதி, பிரபாகரன், சுந்தர், தொழிலதிபர்கள் ஜெயராமன், செல்வம், முத்தொலிமாறன், சர்க்கரை, வெங்கடேசன், விமல், நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜ்,தி.மு.க., நிர்வாகிகள் சடகோபன், சங்கர், வெங்கட், சரவணன், சந்திரசேகரன், சக்திவேல், சண்முகம், பாலமுருகன், வழக்கறிஞர் விஜய், ராமச்சந்திரன், தீனதயாளன், ஏழுமலை, நிஜாம், வழக்கறிஞர் துரைப்பாண்டியன், பொறியாளர் பாரதி, ராஜா, ஆனந்த், சேட்டு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.