TETO-JAC டிட்டோஜேக் பேரமைப்பு சார்பில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தும் கோரிக்கைத் தீர்மானங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 30, 2022

TETO-JAC டிட்டோஜேக் பேரமைப்பு சார்பில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தும் கோரிக்கைத் தீர்மானங்கள்

TETO-JAC டிட்டோஜேக் பேரமைப்பு சார்பில்

தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தும் கோரிக்கைத் தீர்மானங்கள்

1) தொடக்கக் கல்வித் துறையினை பள்ளிக் கல்வித் துறையோடு இணைத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அரசாணை 101, 108ஐ உடனடியாக இரத்து செய்யப்பட்டு தலைவர் கலைஞர் கால நிர்வாக கட்டமைப்பு தொடர்ந்திட வேண்டும்.

2) பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடத்தை இரத்து செய்து, பதவி உயர்வுவழி பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடரச் செய்திட வேண்டும்.

3) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முற்றிலும் இரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

4) இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு முற்றிலும் களையப்பட வேண்டும்.

5) ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்திட அனுமதிக்க வேண்டும்.

6) மத்திய அரசு அறிவித்த நாள்முதல் அகவிலைப்படி உயர்வினை உடன் வழங்க வேண்டும். 7) பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு 10-03-2020 முதல் நிறுத்தப்பட்டு ஊக்கத் தொகையாக வழங்கப்படுவதை மாற்றி அமைத்து பழைய முறையில் ஊக்க ஊதியமாகவே தொடர்ந்திட ஆணை வழங்க வேண்டும். 10-03-2020க்கு முன்னர் உயர் கல்வி முடித்தோரின் ஊக்க ஊதிய உயர்வு உடன் வழங்கப்பட வேண்டும்.

8) 2003-2004 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்கள் தொகுப்பூதியப் பணிக்காலத்தை காலமுறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்.

9) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் காலத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமாய் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

10) EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியிலிருந்து ஆசிரியர்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும். இணையதளம் மூலம் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யும் பணியினை உடனடியாக நிறுத்த வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும். 11) தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டாக்டர் கலைஞர் அவர்கள் பி.லிட், தமிழ் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்க ஆணையிட்டார். அதன்படி பதவி உயர்வு பெற்றவர்கள் பி.எட், பட்டம் பெற்றமைக்காக வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு தணிக்கைத் தடை என்ற பெயரால் தடுத்து நிறுத்தப்படுகிறது. தடையினை நீக்கிட ஆணை வழங்க வேண்டும்.

12) உயர்கல்வி படித்து பின்னேற்பு அனுமதிக்காக காத்திருக்கும் 6500 ஆசிரியர்களுக்கு உரிய பின்னேற்பு ஆணை வழங்க வேண்டும்.

13) இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கல்வித் தகுதி அடிப்படையில், அவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை உருவாக்கி அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கி பணியமர்த்திட வேண்டும்.

14) நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் நிலை இறக்கம் செய்யப்பட்ட 95 தொடக்கப் பள்ளிகளுக்கும் புதிதாக துவக்கப்பட்ட 20 தொடக்கப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. உடன் பணியிடம் தோற்றுவித்து ஆணை வழங்கிட வேண்டும். 15) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் நியமனத் தேர்வு வைக்கும் அரசாணை 149 இரத்து செய்திட வேண்டும். தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறை கைவிடப்பட வேண்டும். தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் நிரந்தா ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டும்.

16) “எண்ணும், ஊழுத்தும்” திட்டத்தை தனியார் ஆய்வு செய்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

17) பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு என்ற பெயரில் பள்ளியினைக் கண்காணிக்கும் நடைமுறைகளால் கற்றல், கற்பித்தல் பணியில் ஏற்படும் பாதிப்பினைக் கருத்தில் கொண்டு அத்தகைய நடைமுறைகளைக் கைவிட வேண்டும்.

18) 2022-ஆம் ஆண்டிற்கான பதவி உயர்வுகளுக்குத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்து உடன் காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும். காலியிடங்களுக்கு 2022 செப்டம்பர் மாதத்திற்குன் மீண்டும் மாறுதல் வாய்ப்பளித்திட வேண்டும்.

கோரிக்கைகளை வென்றெடுக்க ஆசிரியர்கள் அனைவரும் அணிதிரண்டு வாரீர்! வாரீர்!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.