தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர விரும்பாத பட்டதாரிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 25, 2022

தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர விரும்பாத பட்டதாரிகள்

காலியாக உள்ள 11,825 ஆசிரியர் பணியிடங்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரத்து 648 பேர் விண்ணப்பம் செய்திருந்தாலும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 221 பேர் மட்டுமே பணியில் சேர விண்ணப்பித்துளனர்

இதையும் படிக்க | ENGINEERING ADMISSIONS - 2022 - விண்ணப்பித்தோர் எண்ணிக்கை - PDF

தற்கால ஆசிரியர் பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், மொத்தமுள்ள 11,825 இடங்களில் இதுவரை 2,221 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் காலியாக இருந்த 11,825 ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,50, 648 பேர் விண்ணப்பம் செய்திருந்தாலும், தற்காலி ஆசிரியர் பணியில் சேர பட்டதாரி ஆசிரியர்கள் 2,069 பேரும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 152 பேரும் என 2,221 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதனால் இன்னும் 9,604 பணியிடங்கள் காலியாக உள்ளது.

இதையும் படிக்க | பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம்: உயர்கல்வித்துறை

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.7,500 தொகுப்பூதியத்திலும், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையிலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.12,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம், பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர் பணியில், சேர ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த பட்டதாரிகள் விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க | நீட் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மன நல ஆலோசனை

தனியார் பள்ளியில் அளிக்கப்படும் சம்பளத்தை விட குறைவாகவும், வேலை பாதுகாப்பு இல்லாத காரணத்தாலும் பணியில் சேர்வதற்கு பெரும்பான்மையினர் ஆர்வம் காட்டவில்லை என்பது அம்பலமாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.