SBI வாடிக்கையாளரா நீங்கள்.? இந்த புதிய வசதி உங்களுக்கு தான் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 25, 2022

SBI வாடிக்கையாளரா நீங்கள்.? இந்த புதிய வசதி உங்களுக்கு தான்

அக்கவுண்ட் பேலன்ஸ் மட்டுமல்லாமல், மினி பேங்க் ஸ்டேட்மெண்ட் விவரங்களையும் வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ் அப் சேவை மூலம் SBI வங்கி வழங்குகிறது.

இந்தியாவின் மாபெரும் பொதுத்துறை வங்கிச் சேவையான SBI வங்கிச் சேவைகள் இனி வாட்ஸ் அப்பிலும் கிடைக்கும். அதாவது SBI அக்கவுண்ட் விவரங்களை பார்வையிடுவதற்கு இனி உங்களுக்கு ஒரு ஆண்டிராய்ட் ஆப் தேவையோ அல்லது வங்கி ஏடிஎம்-க்கு செல்ல வேண்டிய அவசியமோ இருக்காது.

இதையும் படிக்க | வகுப்பு12|வரலாறு|பாடம் 4|இரண்டாம் உலகப்போரும்காலனியநாடுகளில்அதன் தாக்கமும்

உங்கள் வாட்ஸ் அப்-ஐ திறந்து ஒன்றிரண்டு நடைமுறைகளை கடைப்பிடித்தால் அனைத்து விவரங்களும் உங்களுக்கு தெரிய வந்துவிடும். இதுகுறித்த தகவலை, SBI வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அந்தப் பதிவில், “உங்கள் வங்கி இனி வாட்ஸ் அப்-பில் வருகிறது. ஒருசில நொடிகளில் இனி அக்கவுண்ட் இருப்புத் தொகை (பேலன்ஸ்) மற்றும் மினி ஸ்டேட்மென்ட் போன்ற விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளது. ஆம், அக்கவுண்ட் பேலன்ஸ் மட்டுமல்லாமல், மினி பேங்க் ஸ்டேட்மெண்ட் விவரங்களையும் வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ் அப் சேவை மூலம் SBI வங்கி வழங்குகிறது. இது தவிர, எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ் அப் கனெக்ட் மூலமாக இதர சேவைகளும் வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் அக்கவுண்ட் சம்மரி, ரிவார்ட் பாயிண்ட்ஸ், நிலுவைத் தொகை போன்ற விவரங்களை தெரிந்து கொள்வதுடன், கார்டு மூலம் பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.

இதையும் படிக்க | கற்பித்தலும் இனிது | Ennum Ezhuthum | எண்ணும் எழுத்தும்

வாட்ஸ் அப்-இல் உங்கள் அக்கவுண்ட் இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் தெரிந்து கொள்வது எப்படி என்பதையும் SBI தெரிவித்துள்ளது. இதற்கு வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணின் வாட்ஸ் அப் கணக்கில் இருந்து Hi என்ற மெசேஜை +919022690226 என்ற நம்பருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் எஸ்பிஐ வாட்ஸ் அப் பேங்கிங் சேவையில் உங்கள் மொபைல் எண்-ஐ பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு தான் நீங்கள் எஸ்பிஐ வாட்ஸ் அப் சேவைகளை பயன்படுத்த முடியும். SBI வாட்ஸ் அப் பேங்கிங் சேவைகளில் உங்கள் நம்பரை பதிவு செய்ய “SMS WAREG A/c No’’ என்ற அடிப்படையில் 917208933148 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். இந்த பதிவு நிறைவடைந்த பிறகு நீங்கள் வாட்ஸ் அப் சேவைகளை பயன்படுத்த தொடங்கலாம்.

இதையும் படிக்க | IGNOU பல்கலை UG & PG சேர்க்கைக்கான மறுபதிவு தேதி நீட்டிப்பு...!

இப்போது +919022690226 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும். இப்போது “அன்பார்ந்த வாடிக்கையாளரே எஸ்பிஐ வாட்ஸ் அப் பேங்கிங் சேவைகளுக்கு உங்களை வரவேற்கிறோம். பின்வரும் ஏதேனும் ஒருசேவையை தேர்வு செய்யவும். 1. அக்கவுண்ட் பேலன்ஸ் 2.மினி ஸ்டேட்மெண்ட் 3. வாட்ஸ் அப் பேங்கிங் பதிவை ரத்து செய்க’’ என்ற மெசேஜ் உங்களுக்கு காண்பிக்கப்படும்.

இப்போது உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் தெரிந்து கொள்ள 1 என்று டைப் செய்தால் உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடக்கும். அதேபோல, 2 என்பதை டைப் செய்தால் மினி ஸ்டேட்மெண்ட் கிடைக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.