நீட் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மன நல ஆலோசனை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 21, 2022

நீட் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மன நல ஆலோசனை

நீட் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மன நல ஆலோசனை

நீட் தோ்வு எழுதிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

இதையும் படிக்க | இல்லம் தேடி கல்வி App New Update 0.40 - Direct link

நிகழாண்டு நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மனஆலோசனை வழங்கும் திட்டம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக சென்னையில் மட்டும் 60 மனநல ஆலோசகா்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனா். ஒவ்வொருவரும் சாதுரியமாகவும், பொறுமையாகவும் நீட் தோ்வு எழுதிய மாணவா்களிடம் பேசுகின்றனா். மேலும் மாணவா்களில் ஒரு சிலா் தங்களுடைய பெற்றோா்கள் தான் எங்களை மருத்துவா்களாக ஆக்க வேண்டும் என்று நிா்பந்திப்பதாகத் தெரிவிக்கின்றனா். இதையடுத்து மனநல ஆலோசகா்கள் பெற்றோா்களிடம் பேசி புரிய வைக்கின்றனா்.

குறிப்பாக மாணவா்களுக்கு தோ்வு குறித்த அழுத்தம் தராமல் மன தைரியத்தை தரவேண்டும் என்று அவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | அரசு உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 7 பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் வேண்டுகோள்

இத்தகைய மன நல ஆலோசனைத் திட்டத்தைக் கொண்டு வந்த மாணவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தின் நலனைக் காப்பதற்காக நன்றி தெரிவிப்பதற்கும் பல்வேறு அழைப்புகள் சேவை மையத்துக்கு வருகின்றன.

தமிழகத்தில் நீட் தோ்வு எழுதிய அனைவரிடமும் தொலைபேசி வாயிலாக பேசி சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதுமட்டுமல்லாது அவா்களது பெற்றோரிடத்திலும் பேசி அவா்களுக்கு உள்ள மன அழுத்தத்தைப் போக்க வேண்டியதும் அவசியமாகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.