'எமிஸ்' தளத்தில் வருகைப்பதிவு செய்வதில் சிக்கல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 25, 2022

'எமிஸ்' தளத்தில் வருகைப்பதிவு செய்வதில் சிக்கல்!

அரசு பள்ளி ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், 'எமிஸ்' தளத்தில் வருகைப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க | முதல் முறையாக.. ஒரே நாளில் 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட CBSE

'ஆசிரியர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் வகுப்பறையில், மொபைல் போன்களை பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறையால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு, ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும், பள்ளிக்கு மொபைல் போன் கட்டாயம் எடுத்து வருமாறு, ஏற்கனவே பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது. அதாவது, எமிஸ் என்ற பள்ளிக் கல்வி துறையின் மொபைல் போன் செயலியில், மாணவர்களின் தினசரி வருகைப்பதிவை, தினமும் வகுப்பறையில் இருந்தபடி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க | குரூப் 1 தோ்வு அறிவிக்கை வெளியீடு: ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம்

அதே போல், ஆசிரியர்களின் வருகையையும், தலைமை ஆசிரியர்கள் மொபைல் போன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு, வகுப்பறையில் ஆசிரியர்கள் மொபைல் போனை பயன்படுத்தியாக வேண்டும். இந்நிலையில், ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருப்பது, முரண்பாடாக உள்ளதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.