மாவட்ட மாறுதல் கலந்தாய்வு,மனமொத்த மாறுதல் தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை மனு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 5, 2022

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு,மனமொத்த மாறுதல் தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை மனு

தொடக்கக்கல்வி 2021-22 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் மாவட்ட மாறுதல் தொடர்பான ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்றித் தந்து உதவிட வேண்டுதல் சார்பு.

பார்வை :

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 756/டி1/2021 நாள்: 25.06.2022

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக பார்வையில் கண்ட செயல்முறை ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 07.07.2022 மற்றும் 08.07.2022 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் நலன் சார்ந்த நியாயமான கீழ்க்கண்ட கோரிக்கைகளைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். அவற்றைத் தாங்கள் நிறைவேற்றித் தந்து உதவிடப் பெரிதும் வேண்டுகிறோம். 1.2021-22 ஆம் ஆண்டுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதியின் (Date of appointment) அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும் என பார்வையில் கண்ட செயல்முறை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த காலங்களில் மாவட்ட மாறுதலில் கடைப்பிடிக்கப்பட விதிகளுக்கு முரணாக உள்ளது. இதற்கு முன்பு தொடக்கக்கல்வித்துறையில் https://www.kalviseithiofficial.com நடைபெற்ற மாவட்ட மாறுதல் கலந்தாய்வுகளில் கடைசியாகப் பணியாற்றும் பள்ளியில் பணியில் சேர்ந்த தேதியின் (Station Seniority) அடிப்படையில் தான் முன்னுரிமை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயிக்கப்படுவதால் பல ஆண்டுகளாக எவ்வித மாறுதலும் பெறாமல் ஒரே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இதனால் பணியில் இளைய ஆசிரியர்கள் மாவட்ட மாறுதலில் செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும். எனவே, கடந்த பல கலந்தாய்வுகளில் கடைபிடிக்கப்பட்டது போல் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி மாவட்ட மாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டுகிறோம். 2.2021-22 ஆம் ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் 07.07.2022 மற்றும் 08.07.2022 ஆகிய தேதிகளில் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில் தொடக்கக்கல்வித்துறையில் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் அளித்தவர்களுக்கு இதுவரை மாறுதல் ஆணைகள் வழங்கப்படவில்லை. இதற்கு முன்பு கடந்த காலங்களில் நடைபெற்ற பொதுமாறுதல் கலந்தாய்வுகளின் போது முதலில் மனமொத்த மாறுதல் ஆணைகள் வழங்கப்படுவது நடைமுறையில் இருந்தது. ஆனால், தற்போது கலந்தாய்வு முடிவு பெறும் நிலையிலும் இதுவரை மனமொத்த மாறுதல் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாதது என்பது மனமொத்த மாறுதல் ஆசிரியர்களுக்கு மிகுந்த கவலையை கோரி விண்ணப்பித்த ஏற்படுத்தியுள்ளது. எனவே, மனமொத்த மாறுதல் ஆணைகளை உடன் வழங்கிட தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டுகிறோம். https://www.kalviseithiofficial.com

3.நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றியங்கள் மறு வரையறை செய்யப்பட்ட காரணத்தால் சொந்த ஒன்றியத்திலிருந்து வேறு ஒன்றியத்தில் அல்லது வேறு மாவட்டத்தில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களது சொந்த ஒன்றியத்தில் தற்போது காலிப்பணியிடம் இருப்பின் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து அப்பபணியிடங்களுக்கு பணிமாறுதல் வழங்கிடத் தங்களைப் பெரிதும் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.