எண்ணும் எழுத்தும்': தெரிந்துகொள்ளலாம் வாங்க! - Kalviseithi Official

Breaking

Post Top Ad

Saturday, July 2, 2022

எண்ணும் எழுத்தும்': தெரிந்துகொள்ளலாம் வாங்க!


'எண்ணும் எழுத்தும்' திட்டத்தினை விளக்கும் வகையிலான விழிப்புணர்வுப் பாடலொன்றை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

கரோனா காலத்தில் குழந்தைகள் இழந்த கற்றலைத் திரும்பப் பெறுவதற்கு உதவியாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 13-ம் தேதி திருவள்ளூரில் தொடக்கி வைத்தார்.'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் நோக்கமானது, 2025-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றி படிப்பதும், எழுதுவதும், அடிப்படைக் கணக்குகளைச் செய்யவுமான எழுத்தறிவையும் எண்ணறிவையும் பெறுவது உறுதி செய்யப்படும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.இந்தத் திட்டத்தின்கீழ் அரும்பு, மொட்டு, மலர் என்னும் பெயர்களில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்குப் பல்வேறு நிலைகள் வாரியாகப் பயிற்சி நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் பாடல் களம், கதைக் களம், செயல்பாட்டுக் களம், படைப்புக் களம், பொம்மலாட்டக் களம் போன்றவை அமைக்கப்பட்டு குழந்தைகளின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஊக்குவவிக்கும் வகையில் கற்பித்தல் நடைபெறும் என அரசு அறிவித்தது.இந்த நிலையில், 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தினை விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திட்டப் பாடல் ஒன்றை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.