குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 11, 2022

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்

காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னா் பள்ளிகள் முழுமையாக இயங்கி வருகின்றன. சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறி இருப்பவா்கள் பள்ளிக்கு வர வேண்டாம். பள்ளிக்கு மாணவா்கள் வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்ற வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

மாவட்டத்தில் தற்போது கரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையாக காலையில் பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவா்கள் அருகில் இருக்கும் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்.

1 comment:

  1. தலைப்புகளில் கவனம் அவசியம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.