அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு 26ஆம் தேதி விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 19, 2022

அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு 26ஆம் தேதி விடுமுறை

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் பெற்றது.

முதலாம் ராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக் கலைகளின் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் இந்த ஆலையம் விளங்குகிறது. இந்த ஆலயத்தின் சிறப்பினை கண்டு களித்திட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ள, மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் திருவாதிரை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதையும் படிக்க | காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு (அ) ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு

மாவட்ட அளவில் கொண்டாடப்படுகின்ற இவ்விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் வரும் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

26 ஆம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.