2021-2022 ஆம் ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு முதலமைச்சர் வழங்கினார் - Press Release No : 1248 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 25, 2022

2021-2022 ஆம் ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு முதலமைச்சர் வழங்கினார் - Press Release No : 1248 - PDF

Honble Chief Minister handed over free bicycles to the 11th standard students for the year 2021-2022 [ More... 1 ] [Press Release No : 1248 ]

2021-2022 ஆம் ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு முதலமைச்சர் வழங்கினார் - Press Release No : 1248 - PDF
செய்தி வெளியீடு எண்: 1248 நாள்: 25.07.2022

செய்தி வெளியீடு

ரூ.323.03 கோடி செலவில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6.35.947 மாணவர்களுக்கு மிதிவண்டிகள்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.

மேல்நிலைப் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்குக்கும், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் தமிழ்நாடு அரசால் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

இதையும் படிக்க | TNPSC - மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர், பொதுப் பணித் துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய தெரிவுகள் தொடர்பான இரண்டாம் கட்ட மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு - 20/07/2022

அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.07.2022) சென்னை, நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதையும் படிக்க | பள்ளி வாகனங்களில் விதிமீறல் சிறப்பு தணிக்கையில் 1,757 வழக்குகள் பதிவு: போலீசார் நடவடிக்கை

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் திரு.ஆ. கார்த்திக், இ.ஆ.ப, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் திரு. அணில் மேஷ்ராம், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நல ஆணையர் திருமதி சோ. மதுமதி, இ.ஆ.ப., பள்ளிக் கல்வித்துறை ஆணையர் திரு. க. நந்தகுமார், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி சு. அமிர்த ஜோதி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.