அரசுப் பள்ளி மாணவர்களுக்கு IITlல் தனி இட ஒதுக்கீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 19, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு IITlல் தனி இட ஒதுக்கீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்



சென்னை ஐஐடி-இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புற அரசுப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எஸ்டிஇஎம் திட்டத்தின் 6 நாள் பயிற்சி வகுப்பு சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

எஸ்டிஇஎம் கோடைக்கால பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



சென்னை ஐஐடி சார்பில் தொடங்கப்பட்டுள்ள எஸ்டிஇஎம் திட்டம் பெருமைக்குரியது. எட்டாக் கனியாக எதுவும் இருந்து விடக்கூடாது என்ற நோக்கில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் பயிற்சி வழங்கப்படுகிறது.

6 நாள்கள் பயிற்சியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



சென்னை ஐஐடி-இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.



மாநில கல்விக் கொள்கை தயாரிப்புக் குழுவின் கூட்டம் வரும் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது.



குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் மாநில கல்விக் கொள்கை வளர்ச்சி அடையும். கரோனா காலத்திலும் அரசு பொதுத்தேர்வில் 93 சதவீதம் தேர்ச்சி பெருமை அளிக்கிறது. நிச்சயம் 100 சதவீதம் தேர்ச்சி நோக்கி செல்வோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.