போக்குவரத்து சார்ந்த படிப்பு - அறிவோம் என்.ஆர்.டி.ஐ., - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 12, 2022

போக்குவரத்து சார்ந்த படிப்பு - அறிவோம் என்.ஆர்.டி.ஐ.,


போக்குவரத்து சார்ந்த படிப்புகளை வழங்குவதில் நாட்டின் முன்னோடி கல்வி நிறுவனமான, நேஷனல் ரயில் அண்டு டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஸ்டிடியூட் போக்குவரத்து துறையில் திறமையான மற்றும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலான இளம் பட்டதாரிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்கியத்துவம்

மொத்தம் 13 லட்சம் பணியாளர்களுடன் உலகின் ஏழாவது பெரும் தொழிலாளர்களைக் கொண்ட இந்தியன் ரயில்வேஸ் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கு ரயில் போக்குவரத்தை நாடு முழுவதிலும் அமைத்துள்ளது. 

ஏழாயிரம் ரயில் நிலையங்களுடன் 2 கோடியே 30 லட்சம் பயணிகளுக்கு சேவை வழங்குகிறது. இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்தியன் ரயில்வேஸ் நாட்டில் முதல் முறையாக போக்குவரத்து மற்றும் அவை சார்ந்த துறை படிப்புகளுக்கான பிரத்யேக கல்வி நிறுவனத்தை குஜராத் மாநிலம் வதோதராவில் செயல்படுத்தி உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

இளநிலை பட்டப்படிப்புகள்:

பி.எஸ்சி., - டிரான்ஸ்போர்ட்டேஷன் டெக்னாலஜி

பி.பி.ஏ., - டிரான்ஸ்போர்ட்டேஷன்  மேனேஜ்மெண்ட்

பி.டெக்., - ரயில் இன்பராஸ்டரக்ச்சர் இன்ஜினியரிங்

பி.டெக்., - ரயில் சிஸ்டம்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்

பி.டெக்., - மெக்கானிக்கல் அண்டு ரயில் இன்ஜினியரிங்

முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.பி.ஏ., - டிரான்ஸ்போர்ட் எக்னாமிக்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட்

எம்.பி.ஏ., - லாஜிஸ்டிக்ஸ் அண்டு சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்

எம்.எஸ்சி., - டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி அண்டு பாலிசி

எம்.எஸ்சி., - டிரான்ஸ்போர்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் அண்டு அனலட்டிக்ஸ்

எம்.எஸ்சி., - ரயில்வே சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் அண்டு இன்டெக்ரேஷன்

குறிப்பு: ஒரு சர்வதேச பட்டப்படிப்பான, எம்.எஸ்சி., - ரயில்வே சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் அண்டு இன்டெக்ரேஷன் படிப்பை யு.கே.வின் பிர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது.

தகுதிகள்:

பி.எஸ்சி., படிப்பிற்கு 12ம் வகுப்பில் கணிதப் பாடத்துடன் அறிவியல் பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். பி.பி.ஏ., படிப்பிற்கு கணிதப் பாடத்துடன் எந்த பாடப்பிரிவை படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பி.டெக்., படிப்புகளில் சேர இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப்பாடங்களை படித்திருக்க வேண்டும்.

முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற இளநிலை பட்டப்படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் பாடத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும், அனைத்து பாடங்களிலும் சேர்த்து கூட்டாக, குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. சி.யு.இ.டி., மற்றும் ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 

விபரங்களுக்கு: www.nrti.edu.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.