தமிழகத்தில் 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 14, 2022

தமிழகத்தில் 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி

The Government of Tamil Nadu has announced that 6.18 lakh bicycles will be procured and provided free of cost in 3 months to +1 + ITI students in government and government aided schools. It has been informed that bicycles will be provided to students in the 2021-22 academic year.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் +1, ஐடிஐ பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 6.18 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதத்தில் இலவசமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 2021-22-ம் ஆண்டு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மூன்று மாதத்திற்குள் மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தொழிற்பயிற்சி (ITI) பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆகியோருக்கான 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல் செய்ய ஏற்கனவே ஒப்பந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் தகுதியான மிதிவண்டிகள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலை குறைப்பு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. கொள்முதல் குழுவால் விலை குறித்து முடிவு எடுக்கப்பட்டு விரைவில் 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல் செய்து 3 மாத காலத்திற்குள் மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.