ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றை இணையதளத்தில் தாக்கல் செய்யலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 13, 2022

ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றை இணையதளத்தில் தாக்கல் செய்யலாம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 60 வயது நிறைவுற்ற தகுதியுடைய கட்டுமானத் தொழிலாளர்கள் ஓய்வூதியம் கேட்பு செய்யும் விண்ணப்பங்கள் இணையதளம் (tnuwwb.tn.gov.in ) தாக்கல் செய்யப்பட்டு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஒப்பளிப்பு செய்யப்பட்டு ஓய்வூதியமாக மாதம் ரூ.1000 கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் வருடந்தோறும் ஆயுள்சான்று மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலங்களில் நேரடியாக தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் நேரடியாக வருவதில் உள்ள சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு ஆயுள்சான்றினை இணையதளம் மூலம் சமர்பிக்கும் வசதி கடந்த மார்ச் 8ம் தேதி முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றினை இணையதள வாயிலாக தாக்கல் செய்து பயன் அடையலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.