TNPSC குரூப் 4 தேர்வு - 1.44 லட்சம் பேர் விண்ணப்பம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 4, 2022

TNPSC குரூப் 4 தேர்வு - 1.44 லட்சம் பேர் விண்ணப்பம்!

குரூப் 4 பதவியில் 7,382 காலி பணி இடங்களுக்கான தேர்வு 1.44 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தகவல் In the last 6 days, 1.44 lakh people have applied to write the Group 4 exam, said DNBSC President Balachandran. There are 274 vacant posts of Grama Niladhari Officer (VAO) in Tamil Nadu Civil Service Selection Group 4, 3,681 Junior Assistants, 2108 Typists, 1024 Shorthand Typists (Grade 3) and 7138 vacancies as Store Keepers. 163 posts are being filled in the posts of Junior Assistant, Bill Collector, Shorthand Typist in Tamil Nadu Housing Board, Urban Housing Development Board.

A total of 7,301 seats in the Group 4 post are being filled through competitive selection. A further 81 seats are to be filled for athletes. The announcement was made by DNBSC on the 30th of last month. From that day it was announced that one can apply for the first examination through the website of DNPSC. Following this, the candidates are applying to compete for this examination. Up to 1.44 lakh people have applied for the exam so far.

Commenting on this, DNBSC Chairman Balachandran said: The online application for the Group 4 examination started on the 30th. Candidates are competing and applying for this examination. 1 lakh 43 thousand 832 people have applied for the Group 4 examination in just 6 days (as of 5.25 pm yesterday). The deadline to apply for this examination is 28th. We expect up to 25 lakh people to apply for this exam. The written test will be held on July 24. Thus he said. குரூப் 4 தேர்வு எழுத கடந்த 6 நாட்களில் 1.44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024, ஸ்டோர் கீப்பர் 1 என 7138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் 30ம் தேதி வெளியிட்டது. அன்று முதல் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த தேர்வுக்கு போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை தேர்வுக்கு 1.44 லட்சம் பேர் வரை விணப்பித்துள்ளனர். இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: குரூப் 4 தேர்வுக்கு கடந்த 30ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தல் தொடங்கியது. இத்தேர்வுக்கு தேர்வர்கள் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். 6 நாட்கள் மட்டும்(நேற்று மாலை 5.25 மணி நிரவரப்படி) குரூப் 4 தேர்வுக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 832 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு வருகிற 28ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு சுமார் 25 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கிறோம். தொடர்ந்து ஜூலை 24ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.