அரசு பள்ளிக்குள் புகுந்து சூறையாடிய கரடி-பீரோவை உடைத்ததால் கோப்புகள் சேதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 5, 2022

அரசு பள்ளிக்குள் புகுந்து சூறையாடிய கரடி-பீரோவை உடைத்ததால் கோப்புகள் சேதம்

The bear broke into the Panchayat Primary School office in Kadasolai area near Ooty and broke into the bureau and damaged the files inside. About 25 students are studying here. There are more than 150 families living in Katasola and Alkadu areas.

The bear has been roaming the area for the past few days as it is located close to the forest. The school was closed on the heels of the holiday yesterday. The bear entered the school premises at midnight, broke down the office door and went inside. Is there any food there? As searched. The bureau there was broken and the records inside were damaged by the files being pulled out.

Teachers were shocked to find the school door was broken when they arrived at the school yesterday as usual. There were tracks of bears roaming the neighborhood. Informed Union Councilor Santosh informed the Forest Department. Foresters who arrived at the scene inspected the area. They have been involved in monitoring bear movements.

According to locals, the bear has been roaming the area for the past few days. Currently infiltrated and damaged within the school. It also damaged a house in the area a few days ago. So the forest department has to drive the bear into the dense forest or keep it in a cage and release it elsewhere, ”he said. ஊட்டி அருகே கடசோலை பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த கரடி அங்கிருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த கோப்புகளை சேதப்படுத்தியது.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட கடசோலை பகுதியில் ஊராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 25 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடசோலை, ஆல்காடு பகுதிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி வனத்தை ஒட்டி அமைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கரடி நடமாட்டம் இருந்து வருகிறது. விடுமுறை நாளான நேற்று முன்தினம் பள்ளி மூடப்பட்டிருந்தது. நள்ளிரவில் பள்ளி வளாகத்தில் நுழைந்த கரடி, அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கு ஏதேனும் உணவு இருக்கிறதா? என தேடியுள்ளது. அங்குள்ள பீரோவை உடைத்து உள்ளே இருந்த பதிவேடுகள், கோப்புகளை வெளியில் இழுத்து போட்டு சேதப்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்தபோது பள்ளி கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சுற்றுப்புறங்களில் கரடி நடமாடியதற்கான தடங்கள் இருந்தன. தகவலறிந்த ஒன்றிய கவுன்சிலர் சந்தோஷ் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கரடி நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் கரடி நடமாட்டம் இருந்து வருகிறது. தற்போது பள்ளிக்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டையும் சேதப்படுத்தியது. எனவே வனத்துறையினர் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் அல்லது கூண்டுவைத்து பிடித்து வேறு இடங்களில் விட வேண்டும்’’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.