மாணவர் சேர்க்கைக்கு 1.50 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்; 5 ஆண்டுகள் சிறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 4, 2022

மாணவர் சேர்க்கைக்கு 1.50 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்; 5 ஆண்டுகள் சிறை

Kendriya Vidyalaya principal sentenced to five years in jail with Rs 1 lakh fine for accepting bribe of Rs 1.50 lakh

Rajendran hails from Chennai, Nerkunram and Krishna Nagar. He tried to enroll his son in the first class in 2018 at the Central Government Kendriya Vidyalaya School in Ashok Nagar. Anandan, who was the school principal at the time, demanded a bribe of Rs 1.50 lakh. Rajendran lodged a complaint with the CBI. Accordingly, Anandan was arrested by the CBI and officers while taking bribe money.

The case was heard in the presence of Judge Venkatavarathan in the CBI court in the Chennai High Court premises. It has been ordered to pay Rs. 30,000 as fine to the complainant Rajendran. மாணவர் சேர்க்கைக்கு, 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

.சென்னை, நெற்குன்றம், கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், 2018ல் அசோக் நகரில் உள்ள, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், ஒன்றாம் வகுப்பில் மகனை சேர்க்க முயன்றார். அப்போது, பள்ளி முதல்வராக இருந்த ஆனந்தன் என்பவர் லஞ்சமாக, 1.50 லட்சம் ரூபாய் கேட்டார். இதுகுறித்து ராஜேந்திரன், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன்படி, லஞ்சப் பணத்தை வாங்கிய போது, ஆனந்தனை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கடவரதன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது.இந்த வழக்கில் தகுந்த ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆனந்தனுக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அபராத தொகையில், 30 ஆயிரம் ரூபாயை, புகார்தாரரான ராஜேந்திரனுக்கு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.