நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு இன்றி தவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 10, 2022

நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வு இன்றி தவிப்பு

“35,000 graduate teachers working in government middle schools are without promotion. The government should take action in this regard, 'said Theni District Secretary of the Tamil Nadu Graduate Teachers' Federation Chandran.

He said: In 2004, the government appointed graduate teachers from class 6 to 8 in more than 7,000 government secondary schools. No dependent working rules have been laid down for this. Thus 35 thousand graduate teachers could not get promotion. Moreover, graduate teachers are not even appointed as head teachers in middle schools. We sued in court in 2021 seeking promotion. Chennai High Court has ordered to give the appropriate promotion. But not yet delivered. The government should take action to provide this. "We have made a request to the commissioner of education," he said. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்

''அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 35 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு இன்றி தவிக்கின்றனர். இதில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து 2004ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கான சார்நிலை பணி விதிகள் வகுக்கப்பட வில்லை. இதனால் 35 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியவில்லை.

பதவி உயர்வு இன்றி தவிப்பு

மேலும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகக்கூட பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது இல்லை.பதவி உயர்வு கேட்டு 2021 ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். உரிய பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. இதனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பள்ளிகல்வித் துறை அமைச்சர், கமிஷனரிடம் கோரிக்கை வைத்து உள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.