சமூக வலைதள தவறான பயன்பாடு - B.Ed, மாணவர்களுக்கு அறிவுரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 10, 2022

சமூக வலைதள தவறான பயன்பாடு - B.Ed, மாணவர்களுக்கு அறிவுரை

The University of Teacher Education, B.Ed., has advised colleges to create awareness among students to prevent the misuse of social websites.

The functionality of digital devices has increased worldwide. Mobile phones, tablets, computers, laptops, 'TV', various electronic devices, from small to large, are widely used. In addition, digital usage among school and college students has increased significantly.

Social web chatting processors are also used extensively. At the same time, a letter has been sent to universities and colleges on behalf of the Department of Higher Education stating that student-student misuse of social networking sites can cause a variety of problems, both personally and socially. , Control the use of social networking sites. Activities such as viewing and serving unwanted information on social networking sites can cause various problems for students and their parents. In this regard, awareness programs should be conducted in all B.Ed., colleges. Students should be made aware of the dangers of misuse of digital and social networking sites through short films. Seminars should be held on the disadvantages of social networking.

டிஜிட்டல் பயன்பாடு

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பி.எட்., கல்லுாரிகளை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவுறுத்திஉள்ளது.

உலகம் முழுதும் டிஜிட்டல் கருவிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. மொபைல் போன், டேப்லெட், கணினி, லேப்டாப், 'டிவி' என, பல்வேறு மின்னணு கருவிகளை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிலும், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் டிஜிட்டல் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. ஆசிரியர் கல்வியியல் பல்கலை

சமூக வலைதள சாட்டிங் செயலிகளையும் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், மாணவ - மாணவியர் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதால், தனிப்பட்ட முறையிலும், சமூக அளவிலும், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக, உயர்கல்வி துறை சார்பில், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.இதன் அடிப்படையில், அனைத்து கல்வியியல் கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனைத்து கல்லுாரிகளின் பெற்றோர் மற்றும் மாணவர்கள், சமூக வலைதளங்களின் பயன்பாடுகளை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்.தேவையற்ற தகவல்களை சமூக வலைதளங்களில் கவனிப்பது, பரிமாறுவது போன்ற செயல்பாடுகள், மாணவ, மாணவியருக்கும், அவர்களின் பெற்றோருக்கும், பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதுகுறித்து, அனைத்து பி.எட்., கல்லுாரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்களின் தவறான பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து, மாணவர்களுக்கு குறும்படம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக வலைதள தீமைகள் குறித்து, கருத்தரங்குகள் நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.