ஐ.ஐ.டி.,யில் அட்மிஷன் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 11 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 10, 2022

ஐ.ஐ.டி.,யில் அட்மிஷன் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 11

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டெல்லியில் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:

அப்ளைடு மெக்கானிக்ஸ், கெமிக்கல் இன்ஜினியரிங், கெமிஸ்ட்ரி, சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எனர்ஜி சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், பிசிக்ஸ், டெக்ஸ்டைல் அண்டு பைபர் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் எம்.டெக்., படிப்பு வழங்கப்படுகிறது.

இவைதவிர, இன்டர்டிசிப்ளினரி எம்.டெக்., எம்.எஸ். ரிசர்ச், எம்.டெஸ்., எம்.எஸ்சி., எம்.பி.பி., மற்றும் பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தகுதிகள் மற்றும் உதவித்தொகை:

படிப்பிற்கு ஏற்ப, தேவையான அடிப்படை கல்வித்தகுதியுடன் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது அவசியம். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. விரிவான தகவல்களுக்கு கல்வி நிறுவனத்தின் இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 11

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.