விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்' - தேர்வுத்துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 24, 2022

விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்' - தேர்வுத்துறை

விடைத்தாள் திருத்தும் முகாம்

"அரசு பொதுத் தேர்வுகள் விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்" என தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்தார்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1க்கு மே 5 முதல் அடுத்தடுத்து பொதுத் தேர்வு துவங்கவுள்ள நிலையில் விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் குறித்து மதுரையில் 10 மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் தேர்வுத்துறை இயக்குனர் தலைமையில் நடந்தது. மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வரவேற்றார். இணை இயக்குனர்கள் செல்வக்குமார், பொன்குமார், நரேஷ் முன்னிலை வகித்தனர். இயக்குனர் பேசியதாவது:

கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் திருத்தும் முகாம் நடத்தவில்லை. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்கும் முகாம்களில் அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை பள்ளி நிர்வாகங்களிடம் கேட்டு முகாம் பொறுப்பாளர்கள் செய்துதர வேண்டும். தேவையில்லாத நபர்களை உள்ளே அனுமதிக்க கூடாது.

பிரச்னைகளுக்கும் இடம் கொடுக்காமல் முகாம் அலுவலர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட டி.இ.ஓ.,க்கள், முகாம் அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.