கிராம உதவியாளர் நேரடி நியமன பணி - 10 லட்சம் ரூபாய் பேரம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 24, 2022

கிராம உதவியாளர் நேரடி நியமன பணி - 10 லட்சம் ரூபாய் பேரம்

கிராம உதவியாளர் நேரடி நியமன பணி

கிராம உதவியாளர் பணிக்கு, தி.மு.க., நிர்வாகிகளின் வாரிசுகளிடமே, 10 லட்சம் ரூபாய் பேரம் பேசப்படுவதால், அறிவாலயம் முன்பு போராட்டம் நடத்த போவதாக, தி.மு.க.,வினர் குமுறுகின்றனர்.தமிழகம் முழுதும் பல்வேறு துறைகளில், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. '

இதுபோன்ற நேரடி நியமன பணியிடங்களில், கட்சியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என, அமைச்சர்கள் கூறி வந்தனர். தற்போது வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 10 லட்சம் ரூபாய் பேரம்

கடந்த ஆண்டு ஜூன் மாதமே, ஒன்றிய செயலர்கள் வாயிலாக 'லிஸ்ட்' பெறப்பட்டது. அப்பணியிடத்திற்கு விதவையருக்கு, ௬ லட்சம் ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 8 லட்சம் ரூபாய்; பிற பிரிவினருக்கு ௧0 லட்சம் ரூபாய் என 'ரேட்' நிர்ணயம் செய்து, வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

ஆட்சிக்கு வரும் முன் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு இலவசமாக, அரசு வேலை வழங்கப்படும் என, ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திலும் பேசி, கட்சியினரை தேர்தல் வேலை வாங்கினர். ஆட்சிக்கு வந்த பின், பணம் கொடுத்தால் தான் வேலை என கூறுவதால், வெறுப்படைந்த கட்சியினர், தலைமையின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக, சென்னையில் கட்சி அலுவலகமான அறிவாலயம் முன்பு குடும்பத்துடன் போராட முடிவு செய்துள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.