ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தினால் பள்ளி மீது நடவடிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 28, 2022

ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தினால் பள்ளி மீது நடவடிக்கை

பொதுத் தேர்வில் எந்த மாணவருக்காவது ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தி வைத்தால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5; 10ம் வகுப்புக்கு, மே 6; பிளஸ் 1க்கு மே 10ல், அரசு பொது தேர்வுகள் துவங்க உள்ளன. பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை, அந்தந்த பள்ளிகளே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.சில தனியார் பள்ளிகளில், நடத்தை மற்றும் கல்வி கட்டண பாக்கி காரணமாக, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாதவாறு, ஹால் டிக்கெட் தராமல் நிறுத்தி வைப்பதாக புகார்கள் எழுந்துஉள்ளன

.இதுகுறித்து, மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், கல்வி அலுவலகங்களில் புகார் தெரிவித்துஉள்ளனர். இதையடுத்து, அனைத்து வகை பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள அறிவுரையில், 'அரசு தேர்வு துறையால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும், பொது தேர்வில் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். 'இதில் புகார் எழுந்தால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.