ஷ்ரேஷ்தா நுழைவுத்தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 12 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 9, 2022

ஷ்ரேஷ்தா நுழைவுத்தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 12

ஷ்ரேஷ்தா நுழைவுத்தேர்வு

கல்வியில் சிறந்து விளங்கும் எஸ்.சி., மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டணமின்றி படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது ஷ்ரேஷ்தா நுழைவுத்தேர்வு!

திட்டம்: ஸ்கீம் பார் ரெசிடென்சியல் எஜுகேஷன் பார் ஸ்டூடன்ஸ் இன் ஹை கிளாசஸ் இன் டார்கெட்டர்டு ஏரியாஸ் - ஷ்ரேஷ்தா

முக்கியத்துவம்: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான நுழைவுத்தேர்வை என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த தேசிய அளவிலான நுழைவுத்தேர்வில் சிறப்பாக செயல்படும் 3 ஆயிரம் மாணவர்களுக்கு, மத்திய அரசு, உயர்தர கல்வியை இலவசமாக வழங்குகிறது. தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 9ம் மற்றும் 11ம் வகுப்பில் சிறந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.

தகுதி: ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவான குடும்ப வருமானம் கொண்ட எஸ்.சி., பிரிவை சேர்ந்த மாணவர்கள். 

தேர்வு முறை: ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும். நேரடி தேர்வாக நடைபெறும் இந்த நுழைவுத்தேர்வை எழுத விரும்பும் எஸ்.சி., மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு காலம்: 3 மணிநேரங்கள்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள மாணவர்கள் https://shreshta.nta.nic.in/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 12

தேர்வு நடைபெறும் நாள்: மே 7, பிற்பகல் 02:00 - 05:00 மணிவரை

விபரங்களுக்கு: https://nta.ac.in/ மற்றும் http://shreshta.nta.nic.in/

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.