தமிழகத்தில் நாளை முதல் சிறுவா்கள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 13, 2022

தமிழகத்தில் நாளை முதல் சிறுவா்கள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

தமிழகத்தில் நாளை முதல் சிறுவா்கள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை: பொது சுகாதாரத் துறை தகவல்

தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் மாா்ச் 21-ஆம் தேதி வரை, சிறுவா்கள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு: தேசிய குடற்புழு நீக்க வாரம், 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த முகாமில், 1 முதல் 19 வயது சிறாா்கள்; கருவுறாத மற்றும் பாலூட்டாத 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.

இதில், ஒன்று முதல் இரண்டு வயது குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரையும், இரண்டு முதல் 19 வயது சிறாா்கள் மற்றும் 20 முதல் 30 வயது பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும். இந்த மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது. இவற்றை நன்றாக சப்பி கடித்து மென்று சாப்பிட வேண்டும். இந்த முகாமில் ஒன்று முதல் 19 வயதுடைய 2.39 கோடி சிறாா்களும், 20 முதல் 30 வயதுடைய 54 லட்சத்து 67 ஆயிரத்து 69 பெண்களும் பயனடைய உள்ளனா். இதற்காக 2.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று கோடி குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளில் 54 ஆயிரத்து 439 அங்கன்வடி, சுகாதார, ஆஷா உள்ளிட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இந்த மாத்திரையை சாப்பிடுவதால், குடற்புழுக்கள் முற்றிலும் நீக்கப்படும். ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நினைவாற்றல், அறிவுத்திறன், உடல்வளா்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. எனவே, அனைவரும் தயக்கமின்றி குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.