இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மழலையர் பள்ளிகள் திறப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 13, 2022

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மழலையர் பள்ளிகள் திறப்பு

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மழலையர் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திங்கள்கிழமை முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

புதுச்சேரி மாநிலம் முழுவதும், கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து கரோனா நோய்த் தொற்று அதிகரித்ததால் படிப்படியாக அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அவ்வப்போது நோய்த்தொற்று குறைந்த நிலையில், கடந்தாண்டு தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாகவே புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்று வெகு குறைவாக பதிவாகி வருவதால், புதுச்சேரி மாநிலம் முழுவதும் மீண்டும் மழலையர்(எல்கேஜி, யுகேஜி) பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது. அதனடிப்படையில், திங்கள்கிழமை முதல் அரசு மற்றும் தனியார் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்குள் அழைத்து வந்து விட்டுவந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மழலையர் தங்களது பெற்றோருடன் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.