தேர்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? - தமிழக அரசு சொன்ன தகவல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 4, 2022

தேர்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? - தமிழக அரசு சொன்ன தகவல்!

தேர்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? - தமிழக அரசு சொன்ன தகவல்!

பொதுத்தேர்வுக்கு பிறகு ஜூன் 13 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன ஹைலைட்ஸ்:

தேர்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது? தமிழக அரசு சொன்ன தகவல்!

தமிழகத்தில், 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டு, வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் தொடங்கும் என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 மாதம் ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அடுத்த மாதம் 5 ஆம் தேதி முதல் மே மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 12 வரை பள்ளிகள் விடுமுறை - மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இதற்கிடையே, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 13 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மே மாதம் 13 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதாவது 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதற்கு பிறகு, 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டு, வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் தொடங்கும் என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.