14% அகவிலைப்படி உயர்த்த முதல்வருக்கு கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 21, 2022

14% அகவிலைப்படி உயர்த்த முதல்வருக்கு கோரிக்கை

கூட்டுறவு சங்கம் மூலம் நடத்தப்பட்டு வரும் நியாய விலை கடை சார்பில் அனைத்து தொழிற்சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2021ம் ஆண்டு, அப்போதைய அதிமுக அரசு மூலம் புதிய ஊதிய உயர்வு ஆணை வெளியிட்டபோது 114%அகவிலைப்படியினை 100 சதவீதம் அடிப்படை ஊதியத்தில் இணைத்துவிட்டு, மீதம் 14% அகவிலைப்படியாக வழங்கலாம் என குறிப்பிடப்பட்டது.

இதையும் படிக்க | மதுரை மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் தொடர்பான பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

அதனை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பெறும்போது கூட்டுறவு ஊழியர்களுக்கும் வழங்கலாம் என்பது விடுபட்டு விட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா காலத்தில் வழங்காமல் இருந்த அகவிலைப்படியினை தற்போது தமிழக அரசு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. ஆனால், அதிமுக அரசு செய்த குழப்பத்தினை சுட்டிக்காட்டி கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு இன்று வரை அகவிலைப்படிக்கான அறிவிப்பு, கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை.

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை | Teachers

இதனால், கடந்த ஜனவரி முதல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வு பெறமுடியாமல் தமிழகம் எங்கும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பரிதவித்து வருகிறார்கள். தங்களது நியாயமான கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றி அகவிலைப்படி உயர்வினை வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.