தமிழ்நாட்டில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 21, 2022

தமிழ்நாட்டில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு



இதையும் படிக்க | தமிழகம் முழுவதும் 37 ஆயிரம் பள்ளிகளில் நடந்த மேலாண்மைக் குழு கூட்டத்தில் 50 லட்சம் பெற்றோர் பங்கேற்பு: கல்வித்துறை தகவல்

தமிழ்நாட்டில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் 6 - 9ம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். இதையும் படிக்க | இன்றும் தொடரும் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு!

தமிழ்நாட்டில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் 6 - 9ம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்ட செய்தியில்; தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுகளுக்கு தயாராகி வருவதால், அவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.