ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வாகன சீராளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் தகுதி விவரங்கள்:
பணி: வாகன சீராளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்கள் சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 34க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.kanyakumari.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 24.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/03/2022030931.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.