பள்ளிகளில் பெற்றோர்கள் கூட்டம் 20.03.2022 அன்று நடத்தும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 19, 2022

பள்ளிகளில் பெற்றோர்கள் கூட்டம் 20.03.2022 அன்று நடத்தும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை

பள்ளிகளில் பெற்றோர்கள் கூட்டம் 20.03.2022 அன்று நடத்தும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை:- 1.மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் ந.க.எண்.449/C7/SS/SMC/2021-22,நாள்.16.03.2022-இன் படி 20.03.2022 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளிகளில் பெற்றோர் கூட்டம் நடத்தி SMC-யின் முக்கியத்துவம், பெற்றோர் கடமைகள் மற்றும் SMC மறுகட்டமைப்பு குறித்த விழிப்புணர்வினை வழங்க வேண்டும். 2.மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் ந.க.எண்.449/C7/ஒபக/பமேகு/ நாள்.16.03.2022 கடிதத்தின்படி 20.03.2022 அன்று நடைபெறும் கூட்டத்திற்கான அழைப்பிதழை அனைத்து பெற்றோர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். SMC மறுகட்டமைப்பு செய்வது குறித்த கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும். அரசாணை எண்.42-ன்படி SMC-இல் உறுப்பினராக இருக்க வேண்டியவர்கள் மற்றும் பதவிகளுக்கான முன்னுரிமை பற்றி தெரிவிக்க வேண்டும். SMCஇல் பெற்றோர் உறுப்பினர்களாக, பங்குபெறுவதற்குரிய தகுதிகள் மற்றும் பதவிகளுக்குரிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறைகள் குறித்து விளக்க வேண்டும்.

இதையும் படிக்க | Agriculture Budget Speech - 2022-2023 - English - PDF

SMC மறுகட்டமைப்பு செய்வதில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பள்ளிகளில் உள்ள வகுப்புகளுக்கு ஏற்றவாறு உள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தலைமையாசிரியர் உறுப்பினர்களை தேர்வு செய்யும் அலுவலர் ஆவார். 20 உறுப்பினர்கள் மற்றும் SMC பதவிகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறைகள் மற்றும் நிரப்பப்பட வேண்டிய படிவங்கள் பற்றியும் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். துறை மூலமாக ஏப்ரல் 2022ஆம் மாதத்தில் தெரிவிக்கப்படும் நாளில் மறுகட்டமைப்பு செய்வதற்கு நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பெற்றோர்களில் இருந்து மட்டுமே இருபது உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 3.மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் ந.க.எண்.449/C7/SS/SMC/2021-22,நாள்.18.03.2022-இன்படி 20.03.2022 அன்று நடைபெறும் பெற்றோர்கள் கூட்டம் தேநீர் செலவு ஒரு குழந்தைக்கு ரூ.10 வீதம் பள்ளியின் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூட்டத்திற்கான அழைப்பிதழ் செலவு ஒரு குழந்தைக்கு ரூ.0.50 வீதம் பள்ளியின் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மற்றும் மறுகட்டமைப்பு செய்யப்படும் நாளில் பெற்றோர்களுக்கு தேநீர் செலவு ஒரு குழந்தைக்கு ரூ.10 வீதம்

இதையும் படிக்க | Agriculture Budget Speech - 2022-2023 - Tamil - PDF

பள்ளியின் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 20.03.2022 அன்று பெற்றோர் கூட்டம் மற்றும் மறுகட்டமைப்பிற்கு உரிய பேனர் செலவினம் ஒரு பள்ளிக்கு ரூ.300. 20.03.2022 அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களின் எண்ணிக்கையினை 20.03.2022 அன்றே 1-மணிக்குள் TN EMIS school App-இல் பதிவு செய்ய வேண்டும். மேலும் கூட்டத்தின் புகைப்படங்கள், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ,மாணவியர்களின் எண்ணிக்கை மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களின் எண்ணிக்கையினை வட்டார வளமையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.